இளம் நடிகருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்.. படம் ஹிட்டானதால் கவலை..

Is Rakul Preet Singh regret not doing Geetha Govindam

நடிகர் விஜய்தேவரகொண்டா தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தெலுங்கில் நடித்த அர்ஜூன் ரெட்டி சூப்பர் ஹிட் ஆனது. அப்படம் தற்போது தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

விஜய்தேவர கொண்டா தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் படமும் செம ஹிட்டானது. இப்படத் தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் கால்ஷீட் கேட்டனர். அவர் கைவிரித்து விட்டார். பின்னர் அந்த வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு சென்றது. படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றதால் ராஷ்மிகாவுக்கு மவுசு அதிகரித்து விட்டது.

தான் நடிக்க மறுத்தபடம் சூப்பர் ஹிட்டாகி அதன் மூலம் மற்றொரு நடிகை பிரபலமாகி விட்டதை கண்டு ரகுல் வருத்தம் அடைந்தார். இதுபற்றி ரகுல் கூறும்போது,' 'விஜய்தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க முதலில் எனக்குதான் வாய்ப்பு வந்தது.

தே தே பியார் தே என்ற இந்தி படத்தில் அப்போது நடித்துக்கொண்டிருந்ததால் கீதா கோவிந்தம் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கித் தர முடியவில்லை. இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு பெரிய வருத்தம் இல்லை என்றாலும் அப்படத்தில் நான் நிச்சயம் நடித்திருக்க வேண்டும்' என்றார் ரகுல்.

வருத்தமில்லை என்று ரகுல் கூறினாலும் அவர் மனதில் எவ்வளவு இருக்கிறது என்பதை அவரது பேசிசிலேயே உணரமுடிகிறது என்று ராஷ்கிகா ரசிகர்கள் கமெண்ட் பகிர்கின்றனர்.

You'r reading இளம் நடிகருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்.. படம் ஹிட்டானதால் கவலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டூயட் பாடிய நடிகை கொள்ளை கூட்ட தலைவி ஆனார்.. உண்மை சம்பவ கதையில் தடாலடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்