போலீஸ் வேடத்திற்காக 1 மாதம் மனக்கவலையில் இருந்தேன்.. சமுத்திரக்கனி அனுபவம்..

Actor Samuthirakani Talking About Police character

மதுரை மாநகர காவல்துறை சார்பில் "வெல்வோம்" என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரக்கனி கலந்துகொண்டு பேசும்போது, 'ஏழரைக்கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில், சுமார் ஒன்றரை லட்சம் போலீஸார் மட்டும்தான் பணியில் உள்ளனர். எங்கு என்ன பிரச்னை நடந்தாலும் முன்னதாக காவல் துறை வரவேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்.
நான் ஒரேயொரு படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்தேன். அதற்காக ஒரு மாதம் மனவருத்தத்துடன் இருக்க வேண்டியிருந்தது. அப்படியொரு சூழலில்தான் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருக்கின்றனர்' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சசிகுமார் கூறும்போது, ' நடிகர்கள் திரையில் தோன்றும் ஹீரோக்கள். காவல்துறையினர் தான் நிதர்சனமான ஹீரோக்கள்' என்றார்.
விழாவில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்ஸன் தேவாசீர்வாதம் பங்கேற்று குறும்படத்தை வெளியிட்டார்.

You'r reading போலீஸ் வேடத்திற்காக 1 மாதம் மனக்கவலையில் இருந்தேன்.. சமுத்திரக்கனி அனுபவம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தெலுங்கு திரையுலகம் இன்னொரு வீடு... ஸ்ருதி ஹாசன் உருக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்