கமர்ஷியல் படங்களை தவிர்க்கும் அனுஷ்கா... புதிய தேடலில் ஆர்வம்..

Anushka Sheddy next to be a romantic film

பாகுபலி, ருத்ரமாதேவி, சைரா நரசிம்ம ரெட்டி என போன்ற சரித்திர படங்களில் கடந்த 4 வருடத்துக்கும் மேலாக நடித்த அனுஷ்கா மீண்டும் சரித்திர வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுகிறார். அத்துடன் கமர்ஷியல் ரீதியான மசாலா படங்களுக்கும் குட்பை சொல்கிறார்.
நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடித் தேடி ஒப்புக்கொள்கிறார் அனுஷ்கா. அந்த வகையில் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இதில் காதுகேளாத மாற்றுத் திறனாளியாக வேடம் ஏற்றிருக்கிறார். அதே போல் கவுதம் மேனன் அடுத்து இயக்க உள்ள இரு மொழி படத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியை மையமாக வைத்து அமைக்கப் பட்டுள்ள இந்த ஸ்கிரிப்ட் 90களின் கால கட்டத்தில் நடப்பதுபோன்ற கதை அமைக்கப் பட்டிருந்தாலும் அதனை தற்கால சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறராம் இயக்குனர் கவுதம் மேனன்.

You'r reading கமர்ஷியல் படங்களை தவிர்க்கும் அனுஷ்கா... புதிய தேடலில் ஆர்வம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை டாப்ஸி தமிழில் நடிக்க மறுப்பா... முட்டாள் ஆக மாட்டேன் என பேட்டி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்