ரஜினியின், சும்மா கிழி பாடல் ஐயப்ப பாடலின் காப்பியா? ரசிகர்கள் ஷாக்..

Haris Sabarimala Aiyappa song for Rajinis Darbar Summa Kizhi

ரஜினி, நயன்தாரா நடித்துள்ள தர்பார் படத்தில் இடம் பெறும் 'சும்மா கிழி' பாடல் நேற்று மாலை வெளியானது. வெளியான அடுத்த சில நிமிடங் களில் பல லட்சம்பேர் இப்பாடலை பார்த்தனர். 6 மணி நேரத்தில் 40 லட்சம்பேர் பார்த்தாக கூறப் பட்டது. இப்படி ஒருபக்கம் ரசிகர்கள் பாடலை கொண்டாடிக்கொண்டிருக்க மற்றொரு பக்கம் காப்பியடித்த டியூன் என்று சிலர் பரப்பி வருவது பட தரப்பினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது, மனசு தவிக்குது என்ற பாடல், 1990ல் தேவா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடினார். அந்த பாடலை காப்பி செய்துதான் சும்மா கிழி பாடலை அனிருத் அமைத்திருக்கிறார் என்று சிலர் நெட்டில் பரப்பி வருகின்றனர். அதேபோல் கட்டோடு கட்டு முடி என்ற ஸ்ரீஹரி பாடிய ஐயப்பன் பாடலை அப்படியே காப்பி யெ்திருக்கிறார்கள் என வேறு சிலர் கமென்ட் பகிர்கின்றனர்.

ஏற்கனவே தர்பார் பட பிஸ்னஸ் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் அதை குறைக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

தர்பார் படத்தை ரஜினி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அப்படம்பற்றி இருவிதமாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதை பிடிக்காதவர்கள் யாரோ இப்படி வேண்டுமென்றே பாடல் பற்றி தவறான தகவல் பரப்புவதாக ரஜினி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

You'r reading ரஜினியின், சும்மா கிழி பாடல் ஐயப்ப பாடலின் காப்பியா? ரசிகர்கள் ஷாக்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான்.. ராகுல்காந்தி விமர்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்