நான் இந்தியன் என்பதை மதம் தீர்மானிக்கிறதா? மதத்தில் இணையாத நடிகை கோபம்..

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்ஸா. மை பிரதர்... நிகில், பிளாக் மைல், சலாம் மும்பை, சஞ்ச் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது:

என் தாய் ஒரு இந்து, எனது தந்தை ஒரு கிறிஸ்தவர், என்னை வளர்த்தவர் ஒரு முஸ்லீம். என்னிடம் உள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலும், மதம் குறித்த இடம் காலியாகவே இருக்கிறது. நான் இந்தியர் என்பதை மதம் தீர்மானிக்கிறதா? அதை நான் ஒருபோதும் செய்யவில்லை, அதை ஒருபோதும் செய்யமாட்டேன்' என தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறார் நடிகை தியா மிர்சா.

You'r reading நான் இந்தியன் என்பதை மதம் தீர்மானிக்கிறதா? மதத்தில் இணையாத நடிகை கோபம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏ.ஆர்.ரஹ்மானின் ஒற்றை டிவிட்.. இணைய தளத்தில் தீயாய் பரவுகிறது.. 

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்