மிஷிகினின் சைக்கோ தள்ளிப்போனது.. ஹீரோ உதயநிதிபோட்ட டிவிட்..

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் சைக்கோ. இதில் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளார். வரும் 27ம் தேதி வெளியாவதாக இருந்தது.
இந்நிலையில் 'சைக்கோ' டைட்டிலை மாற்ற வேண்டும் என்ற தணிக்கையில் பிரச்சனை ஏற்பட்டது. இது பற்றி பேசியும், விளக்கம் கொடுத்தும் தலைப்பு பிரச்னையை முடிவுக்குகொண்டு வந்தது மிஷ்கின் தரப்பு.
சமீபத்தில் இளையராஜா இசையில் வெளியான சைக்கோ படத்தின் உன்னை நெனச்சு பாடல் செம ஹிட்டானது. மீண்டும் பழைய இசைஞானி வந்துவிட்டார் என்று ரசிகர்கள் பாடலை டிரெண்டாக்கினர். இதை சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். யூ டி யூபில் இப்பாடல் 2.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது வரும் 27ம் தேதி இந்த ஆண்டின் இனிய இசையாகவும் அதிரடி படமாகவும் சைக்கோவை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வரும் ஜனவரி 24ம் தேதிக்கு சைக்கோ படம் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.
புதிய போஸ்டர் ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இதனை ஹீரோ நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

You'r reading மிஷிகினின் சைக்கோ தள்ளிப்போனது.. ஹீரோ உதயநிதிபோட்ட டிவிட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகையின் தூதர் பதவி பறிப்பு.. குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பின் விளைவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்