ரஜினியை படப்பிடிப்பில் சந்தித்த விளையாட்டு வீராங்கனை.. சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்து பெற்றார்..

ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்நிலையில் 167வது படமாக உருவாகியிருக்கும் தர்ப்பார் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.

தற்போது ரஜினி நடிக்கும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி நடந்துவருகிறது. கடந்த வாரம் முதல் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினியை நேரில் சந்தித்து பேசினார்.

சமீபத்தில் ஸ்விட்சா்லாந்தில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா் பி.வி. சிந்து. அதற்காக அவருக்கு ரஜினி வாழ்த்து கூறினார். சில நிமிடங்கள் ரஜினியிடம் பேசிக்கொண் டிருந்து விட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பி.வி.சிந்து.

You'r reading ரஜினியை படப்பிடிப்பில் சந்தித்த விளையாட்டு வீராங்கனை.. சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்து பெற்றார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 29ம் தேதி அமிதாபிற்கு தாதா சாகேப் விருது.. ஜனாதிபதி வழங்குகிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்