காதல் என்றால் மகளை அஜய்தேவ்கன் சுட்டு தள்ளுவார்.. நடிகை கஜோல் பரபரப்பு..

இந்தி நடிகர் அஜய்தேவ்கன், நடிகை கஜோல். இவர்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அஜய்தேவ்கன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை ஏற்காமல் குடும்பபெண்ணாக இல்லறத்தை மட்டும் கவனித்து வருகிறார் கஜோல். இவர் ஏற்கெனவே பிரபுதேவா நடித்த மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். சிலவருடங்களுக்கு முன் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் நடித்தார். இந்தியில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கஜோல் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.

'எங்களுடையது கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியான சிறிய குடும்பம். குடும்பம்தான் எனக்கு உலகம். எப்போதும் என் குழந்தைகளிடம் நான் கண்டிப்பாக இருக்க மாட்டேன். ஆனால் என் கணவர் குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பாக இருப்பார். எந்தளவுக்கு கண்டிப்பு என்றால் யாரையாவது காதலிப்பதாக என் மகள் சொன்னால் அவளை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி விடுவார் என்றார்.

You'r reading காதல் என்றால் மகளை அஜய்தேவ்கன் சுட்டு தள்ளுவார்.. நடிகை கஜோல் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்கள் இந்தியாவில் வாழ முடியாது.. மத்திய அமைச்சர் திமிர் பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்