தல நடிக்கும் வலிமை மாஸ் கதையாக உருவாகிறது.. தயாரிப்பாளர் தகவல்..

விஸ்வாசம் படத்தில் தல அஜீத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. அதையடுத்து வெளியான நேர்கொண்ட பார்வையில் அஜீத்துக்கு பெரிதாக ஆக்‌ஷனும் இல்லை, அட்டகாசமான பாடல்களும் இல்லை என்ற குறை இருந்தது. அதற்கு காரணம் அப்படம் முழுவதும் கோர்ட்டுக்குள்ளேயே நடப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'நே.கொ பார்வை' படத்தில் ஈடுடேறவில்லை என்று நன்கு அறிந்து வைத்திருந்தார் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத். அடுத்து அஜீத் நடிக்கும் வலிமையை மீண்டும் அவரே இயக்குவதால் இப்படத்தை மாஸ் ஆக்‌ஷன், அசத்தல் பாடல்கள் என கமர்ஷியல் மசாலாவை புகுத்தியிருக்கிறாம். வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் இதை உறுதி செய்திருக்கிறார். 'அஜீத்தின் வலிமை உணர்வுப்பூர்மான தாகவும். எமோஷனலான மாஸ் கதையாகவும் இருக்கும்' என்றார்.

You'r reading தல நடிக்கும் வலிமை மாஸ் கதையாக உருவாகிறது.. தயாரிப்பாளர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? ஆணையர் பழனிசாமி பதில்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்