நடிகர் மகத் காதலியை மணந்தார்.. சிம்பு நேரில் வாழ்த்து..

மங்காத்தா, வந்தா ராஜாவாத்தான் வருவேன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மகத் ராகவேந்திரா தற்போது இவன்தான் உத்தமன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் மேக்வென் இயக்குகின்றனர். வாரனாசியை சேர்ந்த பிராச்சி மிஷ்ரா என்ற பெண்ணை மகத் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தடபுடலாக நடந்தது. தொடர்ச்சியாக மெஹந்தி, சங்கீத் என ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், விருந்துபசாரம் என 3 நாட்களாக விழா களைகட்டியது. திருமண விழாவில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மகத் பிராச்சி திருமண விழாவில் சிம்பு கலந்துகொண்ட படங்கள் நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

You'r reading நடிகர் மகத் காதலியை மணந்தார்.. சிம்பு நேரில் வாழ்த்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெற்றிமாறன் வெளியிட்ட ஆரத் தேடும் பாட்டு வெள்ளை யானை க்காக வெளியீடு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்