120 கிலோ மன்சூர் 25 கிலோ எடை குறைத்தார்.. கதாநாயகன் ஆகும் ஆசையில் கடும் முயற்சி..

கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரே சொந்தமாக படம் தயாரித்து ஹீரோவாக நடித்தார். ஆனாலும் வில்லனாக நடிக்க வந்த வேடங்களை தவிர்க்காமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். . மன்சூர் அலிகானுக்கு புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டார். இதற்காக தனது உடல் எடையை 120 கிலோவிலிருந்து 95 கிலோவாக குறைத்திருக்கிறார். அதாவது உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று வாயையும் வயிற்றையும் கட்டி 25 கிலோ எடை குறைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாகி ஹிட்டான கைதி படத்தில் முதலில் மன்சூர் அலிகான்தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. கதையை கேட்ட தயாரிப்பாளர் இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கலாம என்று கூறி கார்த்தியை ஹீரோவாக்கி விட்டார்.

You'r reading 120 கிலோ மன்சூர் 25 கிலோ எடை குறைத்தார்.. கதாநாயகன் ஆகும் ஆசையில் கடும் முயற்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளி நண்பர்களுடன் கமல் சந்திப்பு.. அனைவருக்கும் பரிசு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்