சிம்புவுக்கு வில்லனாகும் ஹீரோ.. பாலிசியை மாற்றிய நடிகர்..

வில்லனாக அறிமுகமான நடிகர்கள் சிலர் பின்னர் ஹீரோகளாக உயர்ந்த விஷயம் நம் ரசிகர்களுக்கு தெரியும். சமீபகாலமாக ஹீரோக்களாக நடித்து வரும் ஒரு சில நடிகர்கள் வில்லன் வேடம் போடத் தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே விஜய்சேதுபதி ஹீரோவாக ஒரு பக்கம் நடித்துக்கொண்டிருக்கிறார் மற்றொருபுறம் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். அந்த வரிசையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் வில்லன் வேடம் போட்டிருக்கிறார்.

சிறு இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதுடன் ஜமீல் இயக்கும் மஹா படத்திலும் நடித்து வருகிறார். இதில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே சிம்பு, ஹன்சிகா நடித்த காதல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் சிம்புக்கு வில்லனாக நடிக்கிறார் ஸ்ரீகாந்த். அதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. சிறைக்குள் இருக்கும் ஸ்ரீகாந்த்தை இரண்டு போலீசார் துப்பாக்கியால் குறி வைத்து எச்சரிப்பதுபோல் அக்காட்சி உள்ளது.

ஏற்கனவே வில்லன் வேடங்களில் நடிக்க ஸ்ரீகாந்துக்கு நிறைய அழைப்பு வந்தபோதும் அதை ஏற்காமல் ஹீரோ வாய்ப்புக்காக காத்திருந்தார். அப்படி வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகள் கைகொடுக்காத நிலையில் தற்போது தனது பாலிசியை மாற்றிக்கொண்டு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறாராம்.

You'r reading சிம்புவுக்கு வில்லனாகும் ஹீரோ.. பாலிசியை மாற்றிய நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏலியனுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. லாலி பாப் சாப்பிட்டு ருசித்தனர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்