கமல் ஷங்கருக்கு காவல்துறை சம்மன்.. நேரில் அழைத்து விசாரிக்க முடிவு..

சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியாகினர். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்திலிருந்த கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் மற்றும் அங்கு பணியாற்றிய 200 பேர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கனவே இந்தியன் 2 படம் தயாரிக்கும் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கும், கிரேன் இயக்குபவர் மற்றும் தயாரிப்பு நிர்வாகி மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.

You'r reading கமல் ஷங்கருக்கு காவல்துறை சம்மன்.. நேரில் அழைத்து விசாரிக்க முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நயன்தாராவுடன் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டது ஏன்? நச்சுனு பதில் அளித்த நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்