சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு நெருக்கமான விஷயம்.. அவரே வெளியிட்ட தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. தனுஷை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகைகளே திருமணம் ஆனபிறகு வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாதளவுக்கு குண்டாகி விடுகின்றனர். ஆனால் திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகி இரண்டு குழந்தைக்குத் தாய் ஆன ஐஸ்வர்யா தனது உடற்கட்டை என்றைக்கும் இளைமையாக வைத்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதை அவரே விளக்கியிருக்கிறார்.

தீவிரமாக யோகாசன பயிற்சிகளைப் பெற்று அதில் கைதேர்ந்த ஒரு யோகா டிச்சராகவே ஆகியிருக்கிறார் ஐஸ்வர்யா. தினமும் யோகா செய்யாமல் அவரது பொழுது கழியாது என்றளவுக்கு யோகாசனத்தில் முழு ஈடுபாடு காட்டி வருவதே அவரது இளமைக்கும், ஸ்லிம்மான தோற்றத்துக்கும் காரணமாம். சமீபத்தில் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள விதவிதமான யோகாசன படங்களைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்கள். ஐஸ்வர்யா தனுஷ் தனது தோழிகள் சிலருடன் இணைந்து யோகா பயிற்சி மையம் தொடங்கி அதில் முதலீடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'யோகா என்னுடைய இதயத்திற்கு எப்போதுமே நெருக்க மானது' என்று ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார்.

You'r reading சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு நெருக்கமான விஷயம்.. அவரே வெளியிட்ட தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 25 கிலோ எடை குறைக்கும் விஜய் சேதுபதி.. பாலிவுட் படத்துக்காக புதிய முயற்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்