விஜய் வருமான வரி சரியாகச் செலுத்தி உள்ளார்.. பிகில் 50 கோடி, மாஸ்டர் 80 கோடி சம்பளம்..

விஜய் நடித்த பிகில் படத்தின் வசூல் மற்றும் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றியும் மாறுபட்ட தகவல்கள் வந்தது.

இந்நிலையில் சென்ற பிப்ரவரி மாதம் விஜய் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரிடம் ஓரிரு நாட்களுக்குமுன் வரு மான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.

வருமானவரி சோதனைக்குப் பிறகு பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாகப் பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தி இருப்பதாகத் தகவல் வெளியானது.

You'r reading விஜய் வருமான வரி சரியாகச் செலுத்தி உள்ளார்.. பிகில் 50 கோடி, மாஸ்டர் 80 கோடி சம்பளம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினியின் மனிதம் தமிழனுக்கு ஆட்சி.. பாரதிராஜா பாராட்டு.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்