சூர்யா பட நடிகை திடீர் திருமணம்.. தொழில் அதிபருடன் நடந்தது..

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தில் நடித்தவர் ஷீலா. வேதா என்ற படத்தில் அருண் விஜய் ஜோடியாகவும், சீனா தனா 001 படத்தில் பிரசன்னா ஜோடியாகவும் நடித்திருக்கிறார். முன்னதாக இவர் பூவே உனக்காக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் பேபி நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஷீலாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து அவருக்குத் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டியை மணமகனாகத் தேர்வு செய்தனர்.
ஷீலா, சந்தோஷ் திருமணம் பரபரப்பில்லாமல் நடந்து முடிந்தது இதில் இருவீட்டைச் சேர்ந்த குடும்பத்தினர், தோழிகள் மட்டும் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்ததையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ஷீலா.

You'r reading சூர்யா பட நடிகை திடீர் திருமணம்.. தொழில் அதிபருடன் நடந்தது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்ன ஆச்சு திரிஷாவுக்கு.. பிரபல நடிகர் படத்திலிருந்து வெளியேறினார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்