விஜய் மாஸ்டர் ஆடியோ இன்று ரிலீஸ்.. பரபரப்புடன் புள்ளிங்கோ வெயிட்டிங்..

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலும், வாத்தி கம்மிங் பாடலும் வெளியாகி வைரலானது.இந்நிலையில் நேற்று வாத்தி ரெய்டு பாடலும் வெளியானது. இதையடுத்து இந்தப்படத்தின் முழு டிராக் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. இசை அமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளனர்.

கடந்த மாதம் விஜய் வீட்டில் வருமான வரி துறை நடத்திய ரெய்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் மாஸ்டர் பட ஆடியோ நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்குச் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்டோர் அரங்கில் நடக்கும் வகையில் குறைவான கூட்டத்துடன் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட வில்லை. ஆனால் விஜய் பேச்சை நேரடியாக சன் டிவி ஒளிபரப்புகிறது. மாஸ்டர் ஆடியோ விழாவையும், விஜய் பேச்சையும் டிரெண்டிங் ஆக்குவதற்காக விஜய்யின் புள்ளிங்கோ வெயிட்டிங்காம்.

You'r reading விஜய் மாஸ்டர் ஆடியோ இன்று ரிலீஸ்.. பரபரப்புடன் புள்ளிங்கோ வெயிட்டிங்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு அழகிரி கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்