ஒருநாள் முதல்வர் அர்ஜுன் புது தகவல்..

Murder charge against corona people :Actor Arjun

கொரோனாவில் வெளியில் சென்றால் கொலை குற்றம்..

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதலைவராக நடித்த அர்ஜுன் கூறியிருப்பதாவது:
நாம் இப்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் காசு செலவு செய்ய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் போதும். நமது நாடு நமக்கு பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் தந்திருக்கிறது. ஆனால் இன்னொருவரை கொலை செய்யும் சுதந்திரம் தரவில்லை. நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் உங்களிடம் கொரோனா வைரஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பல நூறு பேரை கொலை செய்ய செல்கிறீர்கள் என்று பொருள். வெளியில் செல்லும்போது இன்னொருவர் மூலம் உங்களுக்கு பரவினால் வீட்டுக்கு வந்து உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்யப்போகிறீர்கள் என்று பொருள்.எப்படி இருந்தாலும் அது கொலை குற்றம்தான். கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்காவிட்டால் நம்மை நாமே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்வதற்கு சமம்.தமிழ்நாட்டு மக்களில் 90 சதவிகிதம் மக்கள் சினிமா ரசிர்கள்தான்.

ரஜினி, கமல், விஜய், அஜீத் இப்படி யாரோ ஒருவரின் ரசிகர்கள் அவர்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தடுக்க வேண்டும். அதாவது மொத்தமாக கூடி நின்று தடுக்க வேண்டும் என்பதில்லை. தங்கள் கையில் உள்ள பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் மூலம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இதன் தீவிரத்தை எடுத்துச் சொல்லி தடுக்க வேண்டும்.
இவ்வாறு அர்ஜுன் கூறியுள்ளார்.

You'r reading ஒருநாள் முதல்வர் அர்ஜுன் புது தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டு மாடியில் சண்டை போடும் அருண் விஜய்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்