செவ்வாய் கிரகத்துக்கு போறேன்னு சொன்னோமே..

Corona:Vijay Antony Emotional Speech For India lockdown

கொரோனா கவலையில் நடிகர்..

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், பிச்சைக்காரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பற்றி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் செவ்வாய்க் கிரகத்துக்குப் போகும் மனிதன் நிலைமை இப்படியா ஆக வேண்டும் என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,' மனுஷன் நிலாவுக்குப் போவான் செவ்வாய் கிரகத்துக்கு போவானுதான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால், மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமையை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கொரோனா இப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தெரிய வேண்டும். கூகுள் தளத்திற்குச் சென்று அதுபற்றி தெரிந்துகொள்ளலாம். தற்போதைய நிலைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.
மக்களுக்காகத்தான் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை மறந்து இரவு பகலாக தங்களின் உயிரை யும் பணயம் வைத்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் அலட்சியமாக வெளியே செல்வது என்பது மிகவும் தவறு.

இவ்வாறு விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.

You'r reading செவ்வாய் கிரகத்துக்கு போறேன்னு சொன்னோமே.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்