3ம் உலகப்போர் வந்ததுபோல் உள்ளது.. பரோட்டா சூரி என்ன சொல்கிறார்..

Comedy Actor Soori Shock About Corono Vairus

தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டிருக்கும் காமெடி நடிகர் சூரி படப் பிடிப்பு இல்லாத நிலையில் வீட்டில் மனைவிக்குச் சமையல் அறையில் உதவி செய்து வருவதை சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இவர் மதுரை உள்ளிட்ட இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். அதில் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து விடுமுறையும் கொடுத்து விட்டார். தற்போதுள்ள சூழல் பற்றிக் கூறும்போது, 'ஏதோ 3ம் உலகப் போர் நடப்பது போல் அச்சம் உள்ளது. வறுமையில் இருக்கும் நாடக, நடிகர் நடிகைகளுக்கு உதவும் வகையில் நடிகர் சங்கம் மூலம் 1 லட்சம் நிதி அளித்தேன்' என்றார்.

You'r reading 3ம் உலகப்போர் வந்ததுபோல் உள்ளது.. பரோட்டா சூரி என்ன சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஞ்சலி வீட்டில் புது வரவு.. முத்த மழையில் நனைக்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்