அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, நடித்த குறும்படம் பேமிலி.. கொரோனா விழிப்புணர்வுக்குப் பங்களிப்பு..

AMITABH, RAJINI, CHIRANJEEVI AND MOHAN LAL COMBO FILM FAMILY

கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் பாதிப்பு நாடு முழுவதும் காணப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் குறும்படமொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த். மம்மூட்டி மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ் குமார், ரன்பீர் கபூர், அலியாபட் போன்றவர்கள் நடித்துள்ளனர். டைரக்டர் பரசூன் பாண்டவ் இயக்கியுள்ளார். இதற்கு பேமிலி என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இது டிவியில் வெளியாகி இருக்கிறது. நெடிலும் இது ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருப்பது என்று இதில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த சின்ன குறும்படத்திலும் ரஜினி தனது ஸ்டைய்லை காட்டத் தவறவில்லை.

You'r reading அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, நடித்த குறும்படம் பேமிலி.. கொரோனா விழிப்புணர்வுக்குப் பங்களிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடிக்கு கமல்ஹாசன் மனம் திறந்த கடிதம்.. தேசத் துரோகி என்றாலும் பரவாயில்லை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்