கணவரின் படங்களை நீக்கிய சுப்ரமணியபுரம் சுவாதி.. விவாகரத்து விவகாரமா?

Swathi Delete Wedding And Husband Pictures?

கனிமொழி, போராளி சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவர் 2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று தனது திருமண படத்தையும், கணவரின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார்.

இதையடுத்து கணவரைச் சுவாதி விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் பரவியது. இது பற்றி சுவாதிக்குத் தெரிய வந்தது உடனே அவர் வீடியோ ஒன்றை வெளியீட்டு விளக்கம் அளித்தார். அதில், 'விவகாரத்து என்பதெல்லாம் வதந்தி. எனது திருமண வாழ்க்கை பர்சனலாக வைக்கவே திருமண படங்களை இணையத்திலிருந்து எடுத்துள்ளேன். அதை எல்லாம் எனது பர்சனல் போல்டரில் சேமித்து வைத்திருக்கிறேன் ' என்றார்.
ஆனாலும் சுவாதியிடம் ரசிகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர்.

You'r reading கணவரின் படங்களை நீக்கிய சுப்ரமணியபுரம் சுவாதி.. விவாகரத்து விவகாரமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? முதன்முறையாகப் படங்கள் வெளியிட்டார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்