முககவசம் அவசியம் : விஜயகாந்த் அறிக்கை..

dmdk President Vijyakhanth Latest Statement

முகக்கவைத்தால் ஒன்றிணைவோம் என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே மு தி க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஊரடங்கு அமுலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து மே 3ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ள இந்த காலகட்டத்தில் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே அவரவர் முகத்தில் முக கவசம் அணிந்து மொபைல் போனில் செல்பி படம் எடுத்து அதை டிபியாக பதிவிட்டும், சமூக வலைத் தளங்களில் வாட்ஸ் அப், டிபி, ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்றவற்றில் பதிவிட்டு முக கவசத்தின் அவசியத் தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக மக்களையும் தேமுதிக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 3ஆம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியாக வைத்துத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஒன்றிணைவோம் வென்றிடுவோம்.

இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

You'r reading முககவசம் அவசியம் : விஜயகாந்த் அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 30 கோடி மக்களுக்கு தலா ரூ 10 ஆயிரம், 20 கிலோ அரிசி கோதுமை.. மத்திய அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்