மக்கள் செல்வனை இயக்கும் கிராமத்து நாயகன்..

Yesteryear actor Ramarajan to direct Vijay Sethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதுடன் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோவாக நடித்தாலும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பட்டத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். சமீபத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்கு முன்னதாக ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்தார்.


இந்நிலையில் விஜய் சேதுபதியைக் கிராமத்து நாயகன் ராமராஜன் இயக்க உள்ளதாகத் தகவல் கசிகிறது. ராமராஜன் கிராமத்துப் பாங்கான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் ஹிட்டாகி வசூலில் சாதனை படைத்தது. ஏற்கெனவே இவர் அம்மன் மோவில் வாசலிலே, நம்ம ஊரு ராஜா. விவசாயி மகன் போன்ற படங்களில் நடித்து டைரக்டு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மக்கள் செல்வனை இயக்கும் கிராமத்து நாயகன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜீவி.பிரகாஷ் வெளியிட்ட சூர்யாவின், காட்டுப் பயலே..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்