காதலனை அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை..

ACTRESS ESHA GUPTA INTRODUCES HER BOYFRIEND OFFICIALLY FOR THE FIRST TIME

தமிழில் யார் இவன் படத்தில் நடித்தவர் இஷா குப்தா. இந்தியில், துடக் துடக் துடியா. கமாண்டோ 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் வெளிநாட்டு பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது கிசிகிசு வெளிவந்தது. அதற்குப் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வந்தவர் திடீரென்று தனது பாய்ப்ரண்டும் காதலனுமான ஸ்பேனிஷை சேர்ந்த தொழில் அதிபர் மானுவல் காம்போஸ் குவல்லர் என்பவரை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். அவருடன் ஜோடியாக இருக்கும் படத்தை வெளியிட்ட இஷா.டி அமோ முகொப் நி அமொர் (te amo mucho mi amor) என்ற ஸ்பேனிஷ் மொழியில் சில வார்த்தைகளையும் பதிவிட்டிருக்கிறார். அப்படியென்றால். நான் உன்னை ரொம்பவும் காதலிக்கிறேன், என் காதலா என்று அர்த்தம்.

You'r reading காதலனை அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல இயக்குனரின் பெண் உதவி இயக்குனர் ஊரடங்கு திருமணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்