கார்த்தி நடிக்கும் சுல்தான் பட ஃபர்ஸ்ட் லுக் கிடையாது..

COVID 19: No first look for Karthis Sulthan

கார்த்தி அடுத்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார், பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். (இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்). கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னனா நடிக்கிறார். ட்ரீம்வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இன்று கார்த்தி பிறந்த தினம் என்பதால் சுல்தான் படத்தில் அவரது பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் கொரோனா பாதிப்பில் மக்கள் அவதியில் இருப்பதால் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யவில்லையாம்.விவேக் மெர்வின் இசை அமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.


இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. மேலும் இயக்குனர்கள் மித்ரன், முத்தையா படங்களிலும் நடிக்கப் பேச்சு நடக்க உள்ளார்.

You'r reading கார்த்தி நடிக்கும் சுல்தான் பட ஃபர்ஸ்ட் லுக் கிடையாது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்