கன்னட நடிகை கார் விபத்தில் பலி.. 22 வயதில் சோக முடிவு..

Kannada TV actress Mebeina Michael dies in a road accident

கன்னட பட நடிகை மெபினா மைக்கேல். டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலம் ஆனவர். 22 வயதே ஆன இவர் கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். மதுகேரியில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சிலருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார். தேவி ஹள்ளி பகுதியில் வரும் போது அந்த வழியாக வந்து டிராக்டர் மீது கார் மோதியது.

இதில் காரில் வந்த மெபினா மற்றும் உடன் வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது காயம் அடைந்தவர்கள் குணம் அடைந்து வந்த நிலையில் மெபினா மரணம் அடைந்தார். இது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

You'r reading கன்னட நடிகை கார் விபத்தில் பலி.. 22 வயதில் சோக முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒ டி டி தளத்தில் 7 தமிழ் படங்கள் நேரடி ரிலீஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்