சூர்யா மீது விழுந்த வெயிட்.. அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் தப்பினார்..
Suriya injured in his hand
நடிகர் சூர்யா ஊரடங்கு தடை காலத்தில் வீட்டில் இருக்கிறார். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் டம்பிள்ஸ் வெயிட் தூக்கி பயிற்சி செய்தபோது டம்பிள்ஸ் கழன்று அவரது கை மீது விழுந்தது.அதிலிருந்து அடிபடாமல் விலகியபோது இடது கை மோதிர விரல் மீது விழுந்தது. இதில் விரலில் காயம் ஏற்பட்டது உடனடியாக டாக்டரிடம் சென்றார். அவர் சிகிச்சை அளித்தார்.
இது குறித்து சூர்யா கூறும்போது,எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்தது. அடிபட்டதற்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டேன். அதிக எடை கொண்ட வெயிட்டை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
You'r reading சூர்யா மீது விழுந்த வெயிட்.. அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் தப்பினார்.. Originally posted on The Subeditor Tamil