ஒலிம்பிக் வீராங்கணை “கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்றுப் படம் பெண் இயக்குனர் இயக்குகிறார்..

Biopic on weightlifter Karnam Malleswari announced

சமீபமாக இந்தியத் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி தரும் படைப்புகளாக மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை திரை படைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது.

பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி” என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியப் பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதாரணமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்தியத் திரைப்படமாகத் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. பலரது எதிர்பார்ப்பிற்குரிய இப்படைப்பினை எம்விவி.சத்யநராயணா , கொனா வெங்கட் ஆகிய இருவரும் எம்விவி சினிமா மற்றும் கொனா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிக்கிறார்கள். இயக்குநர் சஞ்சனா ரெட்டி இயக்க, கொனா வெங்கட் படத்தின் எழுத்து பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

You'r reading ஒலிம்பிக் வீராங்கணை “கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்றுப் படம் பெண் இயக்குனர் இயக்குகிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஷ்ய மொழியில் பிரபாஸ், அனுஷ்காவின் பாகுபலி.. 2பாகமும் ஒரே பாகமாக ஒளிபரப்பாகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்