கார்த்திக் நரேன் இயக்குனர் பெயரில் மோசடி.. செல்போன் எண் கொடுத்து நூதனம்..

Fraud in the name of film director

ரகுமான் நடித்த துருவங்கள் பதினாறு, அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்துள்ள நரகாசூரன், அருண் விஜய், பிரசன்னா நடித்த மாஃபியா படங்களை இயக்கியவர் கார்த்திக்நரேன். இவரது பெயரில் நூதனமாகப் பண மோசடி நடப்பதாக அவரே தகவல் தெரிவித்திருக்கிறார்.


இது பற்றி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது :9777017348 என்ற
செல்போன் நம்பரைக் கொடுத்து எனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகப் பணம் வசூலித்து யாரோ மோசடி செய்வதாக எனக்குத் தெரிய வந்தது. அப்படி யாராவது செல்போன் எண் கொடுத்து பணம் பறிக்க முயன்றால் அந்த நம்பரை பிளாக் செய்து விடுங்கள். இந்த மோசடிக்காரர்கள் நரகத்தில் தள்ளி எரிக்கப்படுவார்கள்.

இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்திருக்கிறார்.

You'r reading கார்த்திக் நரேன் இயக்குனர் பெயரில் மோசடி.. செல்போன் எண் கொடுத்து நூதனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுங்கள்.. மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்