சிம்புவுக்கு திருமணம் எப்போது? டி..ராஜேந்தர், உஷா பதில்..
T.rajendran open talk about simbu marriage
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. லண்டன் பெண்ணை மணக்க உள்ளதாக நெட்டில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர்.இதுகுறித்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா இணைந்து வெளியிட்ட அறிக்கையில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்குப் பொருத்தமான பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் எனக் குறி உள்ளனர்.
You'r reading சிம்புவுக்கு திருமணம் எப்போது? டி..ராஜேந்தர், உஷா பதில்.. Originally posted on The Subeditor Tamil