திருநங்கைகளை அக்கா.. தங்கையாக ஏற்ற காமெடி நடிகர்..

Actor Soori helped transgender and Handicaped

நகைச்சுவை நடிகர் சூரி அடிக்கடி கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவதுடன் ஏழை எளியவர்களுக்கு உதவியும் வருகிறார். சமீபத்தில்"வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்" மற்றும் "மாற்றம் பவுண்டேஷன்" மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் வழங்கிய கொரோனா உதவி நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகள் வழங்கினார். முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.


பின்னர் சூரி பேசும்போது.எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புகிறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்குச் சந்தோஷம், அதே நேரத்தில் எனக்குக் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக் கூடாது. கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனா தான். தேவையின்றி வெளியே வராதீர்கள்.

என் சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையைச் சார்ந்த என் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் என்னால் ஆன உதவியை நான் செய்துள்ளேன், செய்து கொண்டும் இருக்கிறேன். "வேலம்மாள் கல்விக் குழுமம்" என்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். "மாற்றம் பவுண்டேஷன்" சுஜித். உதய் சங்கரும் பல உதவி திட்டங்களைச் செய்து வருகின்றனர். அவர்களிடம் உங்களுக்கு உதவ உடனே சம்மதம் தெரிவித்தார்கள். என் மூலமாகவே அதைச் செய்யச் சொன்னார்கள். அதுதான் இன்று நடக்கிறது. மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
இவ்வாறு சூரி பேசினார்.

You'r reading திருநங்கைகளை அக்கா.. தங்கையாக ஏற்ற காமெடி நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பலி 7466 ஆக அதிகரிப்பு.. 2.66 லட்சம் பேருக்கு பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்