ஜெயம் ரவி படத்தில் சிறுவயதிலேயே ரவுடி பேபியின் அறிமுகம்..

Did you know Sai Pallavi featured in Jayam Ravi film

பிரேமம் படத்தில் தான் நடிகை சாய் பல்லவி அறிமுகமானதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் சிறுமியாக நடித்திருக்கிறார். தனுஷுடன் மாரி2ம் பாகத்தில் ரவுடி பேபி பாடலுக்கு நடித்து தனது டப்பாங் குத்து ஆட்டத்தால் அதிரடி காட்டியவர் சாய்பல்லவி.


அதற்கு முன்பே ஜீவா இயக்கிய தாம் தூம் படத்தில் சிறுமியாக இருந்த சாய் பல்லவி நடித்திருக்கிறார். இதில் ஜெயம் ரவி ஹீரோ. ஹீரோயினாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். அப்படத்தில் கங்கனா நடிக்கும் ஒரு காட்சியில் 6ம் வகுப்பு படித்து வந்த சாய்பல்லவி சிறுமியாக நடித்த புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி சாய்பல்லவி கூறும்போது, தாம் தூம் படத்தில் நடித்தபோது நான் 6ம் வகுப்பு தான் படித்து வந்தேன். பள்ளிக்கு கட் அடித்துவிட்டு 3 நாள் தான் சூட்டிங்கில் கலந்துகொண்டேன் . ஆனால் அப்படத்தை எனது அறிமுக படம் என்று கூறமுடியாதுஎன்றார்.

You'r reading ஜெயம் ரவி படத்தில் சிறுவயதிலேயே ரவுடி பேபியின் அறிமுகம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்வரை சந்தித்துப் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்ற சிரஞ்சீவி.. ஜூலை 15 முதல் ஹூட்டிங்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்