கமல் கால்ஷீட் எப்போது? 2ம் பாக ஸ்கிரிப்டுடன் கவுதம் தயார்..

Gautham completes Vettaiyadu Vilayadu-2 script waiting for kamal

முன்னெப்போதையும் விட கமல்ஹாசன் தற்போது படு பிசியாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2பாகம் ஷுயூட்டிங் தொடங்க ஷங்கர் காத்திருக்கிறார். மறுபக்கம் தேவர்மகன் 2பாகம் ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கும் கமல் அதில் இயக்கம், நடிப்பு. தயாரிப்பு பொறுப்பை ஏற்கிறார். இதற்காகச் சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மானுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் 2ம் பாக ஸ்க்ரிப்ட் எழுதி முடித்திருக்கிறார் கவுதம் மேனன்.


120பக்கம் ஸ்க்ரிப்ட் முடித்திருக்கும் கவுதம் இன்னும் இருபது நிமிட காட்சிகளுக்கான ஸ்கிரிப்ட் மட்டும் முடிக்க வேண்டுமாம். 3 படங்களில் இணைந்திருக்கும் கமல் எந்த படத்தை முதலில் முடிப்பார் என்பது தெரியவில்லை. ஷங்கர் படம் தான் இயக்கும் தலைவன் இருக்கிறான் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கினால் கவுதம் மேனன் படத்துக்கு கால்ஷீட் எப்போது கிடைக்கும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வேட்டையாடு விளையாடு 2படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது.இந்தியன் 2படத்தை லைக்கா தயாரிக்கிறது.

You'r reading கமல் கால்ஷீட் எப்போது? 2ம் பாக ஸ்கிரிப்டுடன் கவுதம் தயார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விக்ரம், துருவ் இணைவது திகில் படமா? இன்னொரு பீட்ஸா உருவாகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்