ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தில் நாசர்.. ஸ்ருதிஹாசன் வெளியிட்டார்..

Sripriyas Yasodha short film Released By Sruthi Haasan

நடிகை ஸ்ரீபிரியா இயக்குனராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்திருக்கிறார். இவர் எழுதி, இயக்கி நடித்திருக்கும் குறும்படம் யசோதா. முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நாசர். இவர்களுடன் நித்யா, ஸ்ரீகாந்த், பானு பிரகாஷ், சோனியா போஸ், சிவகுமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை சொல்லும் கதை தான் 'யசோதா'. இதன் கதை பற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது:சென்னையில் வசிக்கும் ஸ்ரீதர் கஸ்தூரி தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை. தேசிய அளவிலான ஊரடங்குக்குச் சற்று முன்னதாக, வீட்டு வேலைக்காரப் பெண் பொறுப்பில் மனைவியை விட்டுவிட்டு, சொந்த ஊரிலிருக்கும் தன் வயதான தாயாரைப் பார்க்கப் புறப்படுகிறார் ஸ்ரீதர். ஊரடங்கு காரணமாகச் சென்னைக்குத் திரும்ப இயலாத நிலையில், ஸ்ரீதரால் தன் மனைவியையோ வேலைக்காரப் பெண்ணையோ தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எங்கே கஸ்தூரி? எனக் கேள்வி எழுப்புகிறது குறும்படம்.இதன் படத்தொகுப்பை ரூபன் ஏற்க இசையை கிரிஷ் அமைக்கிறார். யசோதா பாடலை நிருத்ரியா பிள்ளை பாடியிருக்கிறார்.யசோதா குறும்படத்தை நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு ஸ்ரீப்ரியா கூறினார்.

You'r reading ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தில் நாசர்.. ஸ்ருதிஹாசன் வெளியிட்டார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி நடிப்பில் பேட்ட 2 உண்டா? இயக்குனர் பதில்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்