சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை இந்தி பதிப்புக்கு வரவேற்பு.. அதிக பட்ச தொலைக்காட்சி பார்வையாளர்கள்..

Sibi Sathyarajs Police Aur Tiger Dubbed Movie highest viewed film in TV

சத்யராஜின் சொந்தப் பட நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படம், சிபி சத்யராஜுக்குத் திருப்பு முனை ஏற்படுத்திய படமாகும். வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற இப்படம் விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதென்றாலும், குழந்தைகளுக்கும், செல்ல நாய்களை வளர்ப்பவர்களுக்கும் இன்று வரை மனதுக்கு நெருக்கமான படமாகவே இது இருந்து வருகிறது.


நல்ல கதையம்சம் உள்ள படங்கள் பிராந்திய எல்லைகளையும், மொழியின் தடைகளையும் கடந்து புகழப்படும் என்பது மீண்டும் ஒரு முறை இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது. 'போலீஸ் அவுர் டைகர்' என்ற பெயரில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம், கடந்த வாரம் B4U கோடாக் சேனலில் ஒளிபரப்பான போது 2099000 பார்வையாளர்களைப் பெற்றது. இது 2.09கோடி பேர் இப்படத்தைப் பார்த்ததற்குச் சமம்.

சிபி ராஜின் மற்றொரு வெற்றிப் படமான 'சத்யா' யூ ட்யூபில் வெளியிடப்பட்ட பின் கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து சிபிராஜ் நடித்து வருவதால், அகில இந்திய அளவில் அவரது படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சிபிராஜ் மற்றும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இணைந்த முதல் படமான 'நாணயம்' பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இணைந்த 'நாய்கள் ஜாக்கிரதை' படமும் வெற்றிக் கொடி நாட்டியது நினைவு கூறத்தக்கது.

You'r reading சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை இந்தி பதிப்புக்கு வரவேற்பு.. அதிக பட்ச தொலைக்காட்சி பார்வையாளர்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை உஷாராணி காலமானார்.. நடிகர் சங்கம் இரங்கல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்