மாஜி கணவரின் மனைவியைக் கலாய்த்தவருக்கு நடிகை காஜல் குட்டு..

Actress KajalPasupathi scold Netizen

நடன இயக்குனர் சாண்டியை மணந்த நடிகை காஜல் பசுபதி பின்னர் அவரிடம் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி பிறந்த நாளில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு சாண்டி வாழ்த்துக் கூறியிருந்தார்.

அதைப்பார்த்த ஒரு நெட்டீஸன் சாண்டி மனைவியை காஜல் பசுபதியுடன் ஒப்பிட்டு ஒரு வில்லங்க மெசேஜ் வெளியிட்டார் . அதைக் கவனித்த காஜல் அந்த நெட்டீஸனுக்கு பதில் அளித்தார். சாண்டியை நான் 2012 ம் ஆண்டே பிரிந்துவிட்டேன். அதற்குக் காரணம் நான் தான். அவரை நான் நிம்மதியாக இருக்க விடவில்லை, சாண்டி மீது எந்த தவறும் இல்லை என்று பலமுறை கூறிவிட்டேன். எனது விவாகரத்துக்கும் அவர் மனைவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இனி சாண்டி ஒருபோதும் என் கணவர் கிடையாது என்றார் காஜல் பசுபதி.

You'r reading மாஜி கணவரின் மனைவியைக் கலாய்த்தவருக்கு நடிகை காஜல் குட்டு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பத்துக்கு மாறாக வெளியாகிறது சுஷாந்த் சிங் கடைசி படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்