சீன கொரோனா வைரஸ் பற்றி ஆஸ்கர் எழுத்தாளர் இயக்கும் படம்..

Oscar-winner Charles Randolph directorial debut with a movie on Covid-19 pandemic

பாம்ஷெல் என்ற படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர் எழுத்தாளர் சார்லஸ் ராண்டால்ஃப் . இவர் உலக அளவில் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி உண்மை சம்பவங்களை மையமாக வைத்து புதிய ஸ்கிரிப்ட் எழுதுவதுடன் அப்படத்தை முதன்முறையாக டைரக்டும் செய்கிறார்.


சீனாவில் ஊகான் நகரில் இந்த வைரஸ் உருவானது எப்படி? அதற்காக அங்கு நடத்தப்பட்ட நாடகங்கள் என்ன? கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் பின்னணி என்ன? என்பது பற்றி விரிவாக இக்கதை அமைக்கப்பட உள்ளது. எஸ்.கே.குளோபல் நிறுவனம் இப்படத்துக்கான உரிமை பெற்றிருக்கிறது. இந்த கதைப்படி கோவிட் 19 என்ற ஒரு மிகப் பெரிய மிருகத்துடன் போராடும் சம்பவத்துக்கு மக்கள் உள்ளாகி இருக்கின்றனர். அதுவும் இருட்டிலிருந்தபடி இந்த போராட்டத்தை நடத்த வேண்டி உள்ளது. அதன் விளைவுகள் என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது எனப் பட நிறுவனம் தெரிவித்திருக்கிறது.பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாகவிருக்கிறது.

You'r reading சீன கொரோனா வைரஸ் பற்றி ஆஸ்கர் எழுத்தாளர் இயக்கும் படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை பூர்ணாவை பிளாக்மைல் செய்த கூட்டத்துக்கு போலீஸ் வலை.. முக்கிய குற்றவாளிகள் கைது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்