2 வருடத்துக்குப் பிறகு டிவிட்டரில் மெசேஜ் பதிவிட்ட வெற்றிமாறன்..

After two years, Vetrimaaran tweet

ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வித்தியாசமான படங்களைத் தந்தவர் வெற்றி மாறன். இவர் தனது படங்களுக்கு விருது கிடைத்தாலும் பாராட்டு கிடைத்தாலும் அது பற்றி பெரிதாகப் பதில் அளிக்காமல் தனது அடுத்த பணிக்குச் சென்றுவிடுவார். இவர் கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தனது பதிவைச் செய்திருந்தார்.

தந்தை பெரியார் சிலையை யாரோ அவமதித்தபோது அதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். 2 வருடம் கழித்து தற்போது சாத்தான் குளம் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தும் துணிச்சலாகச் செயல்பட்ட நீதிபதிகளுக்குப் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். அவர் பதிவில் கூறும்போது,மாண்புமிகு நீதியரசர்கள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி. மாஜிஸ்த்திரேட் பாரதிதாசன், துணிச்சல் மிக்க ரேவதி நீங்கள் அனைவரும் எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறீர்கள். உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம் எனத் தெரிவித்திருக்கிறார் வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கிய விசாரணை என்ற படம் போலீஸாரின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்.

You'r reading 2 வருடத்துக்குப் பிறகு டிவிட்டரில் மெசேஜ் பதிவிட்ட வெற்றிமாறன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜ்கிரண் அடித்த ராயல் சல்யூட்.. யாருக்கு தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்