பிரபல நடிகருக்கு டான்ஸ் மாஸ்டரின், அண்ணே வெயிட்டு வெயிட்டு..

Dance Master Sridhar Plan to Dedicate Vijay Sethupathi Anne Veittu Veiyttu,

கொரோனா ஊரடங்கில் மக்கள் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்று ஒருபக்கம் முயன்றுக்கொண்டிருக்க மறுபக்கம் திரைத்துறையினர் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். தாங்களே ஒரு பிரபலமாக இருந்தாலும் இன்னொரு பிரபலத்தைப் பற்றிப் பேசினால் தான் மக்களிடம் தங்களைக் கொண்டு செல்லும் என்ற நிலை உள்ளது. தியேட்டரில் படமும் ரிலீஸ் இல்லை, மேடைபோட்டு மக்கள் முன்னிலையில் ஆடவும் வழியில்லை என்றால் இப்படித்தான் செய்தாக வேண்டும்.

பிரபல டன்ஸ்மாஸ்டர் ஸ்ரீதர். ரஜினி தொடங்கி விஜய், அஜீத் என எல்லா ஹீரோக்கள் படத்திலும் இவரது கைவண்ணம், இல்லை, இல்லை கால் வண்ணமான டான்ஸ் களைகட்டியிருக்கிறது. தனித்துவம் கொண்ட அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கொரோனா லாக் டவுன் ஒருபக்கம் கால்கட்டு போட்டாலும் கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு "ரசிகனின் ரசிகன்" என்ற ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற ஆல்பம் பாடலைச் சமர்ப்பணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர். ஆரம்பக் கட்ட பணிகளில் இருக்கும் இந்தப் பாடல் விரைவில் அவரின் ஆத்மார்த்தமான சமர்ப்பணமாக வெளியாக உள்ளது.

You'r reading பிரபல நடிகருக்கு டான்ஸ் மாஸ்டரின், அண்ணே வெயிட்டு வெயிட்டு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இணைய தளத்தில் வனிதா, கஸ்தூரி கடும் மோதல்.. காமெடி பீஸ் கஸ்தூரி, குழாயடி சண்டைக்காரி வனிதா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்