இதயம் முரளி மகனுடன் பெண் இயக்குனர் திருமணம்..

Actor Murali Son Akash Married Director Sneha Britto

இதயம் பட நடிகர் முரளி. பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தார். மறைந்த முரளியின் மகன்கள் அதர்வா, ஆகாஷ். ஆகாஷ் வெளிநாட்டில் படித்தபோது நடிகர் விஜய்யின் உறவுக்கார பெண்ணும். சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவருமான சினேகாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரிட்டோவின் தந்தை விஜய் நடித்த பல படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இவர்தான் தயாரித்திருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கில் ஆகாஷ். சினேகா திருமணம் சத்தமில்லாமல் நடந்தது.முன்னதாக இவர்கள் திருமணம் சாந்தோம் சர்ச்சில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னை திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரங்கில் நடந்தது. கொரோனா வழிகாட்டு முறைகளுடன் திருமணம் நடத்தப்பட்டது குறைந்த அளவிலான உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த திருமணம் பற்றி தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, நடிகர் அதர்வா கூறியதாவது:மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் இல்ல திருமண நிகழ்வு அனைவர் ஆசீர்வாதத்தில் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது.

இந்நிகழ்வை இன்னும் பிரமாண்டமாகக் காலத்தின் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண்டாட்ட நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம். தற்போதைய உலக சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் மிக விரைவில் நிலைமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு விழாவைத் திட்டமிட்டுள்ளோம்.திருமணப் பந்தத்தில் இணைந்து பயணிக்கும் எங்கள் இல்ல வாரிசுகளை அனைவரும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம் என்று கூறி உள்ளார்.

You'r reading இதயம் முரளி மகனுடன் பெண் இயக்குனர் திருமணம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தந்தையின் சித்ரவதை , அடிதாங்க முடியாமல் நடிகை கதறல்.. தினமும் டார்சர் என்னையும் அம்மாவையும் காப்பாற்றுங்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்