திமிரு நடிகை ஷ்ரயா ரெட்டி படத்தை திடீரென்று ஒடிடியில் நிறுத்திய தயாரிப்பாளர்..

Thimiru Actress Sriya Reddy Movie Stop suddenly On OTT Platform

திமிரு படத்தில் நடித்தவர் ஷ்ரயா ரெட்டி. இவர் நடித்துள்ள படம் அண்டாவ காணோம். இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி வெளியாகவில்லை இதுகுறித்து அப்பட தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் கூறியதாவது:அண்டாவ காணோம்‌” திரைப்படம்‌ ஜேஎஸ்கே பிரைம் மீடியா ஆப்பில் திரையிட நேற்று வெளியிட திட்டமிட்டிருந்தோம்‌. சில தவிர்க்க முடியாத காரணங்களால்‌ ரிலீஸ்‌ தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான ரிலீஸ் தேதியை விரைவில்‌ அறிவிக்க உள்ளோம்‌. “அண்டாவ காணோம்‌” திரைப்படத்திற்கு மிகப்பரிய வரவேற்பு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி.

கிட்டத்தட்ட 14 ஆயிரம்‌ பேர்‌ முன்பதிவு செய்திருந்தனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேஎஸ்கே பிரைம் மீடியா ஆப், ஆண்ட்ராய்டு, பையர் ஸ்டிக், ஸ்மார்ட் டிவி, வெப் பிரவுசர் போன்ற அனைத்து தளங்களிலும்‌ பதிவிறக்கம்‌ (டவுன்லோடு)செய்யத் தயார்‌ நிலையில்‌ உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. அதுமட்டுமல்லாமல்‌ தளத்தினை பதிவிறக்கம்‌ செய்து சைன் இன் செய்தவுடன் 50க்கும்‌ மேற்பட்ட திரைப்படங்களை இலவசமாகக் கண்டு களிக்கலாம்‌.

“அண்டாவ காணோம்‌' திரைப்படம்‌ ரிலீஸ்‌ தள்ளிப்போன காரணத்தினால்‌ உடனடியாக பார்வையாளர்களுக்கு இந்த வாரம்‌ வரும்‌ ஞாயிற்றுக்கிழமை 30-08-2020 அன்று “மம்மி சேவ்‌ மீ' திகில்‌ திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம்‌. வரும்‌ ஞாயிற்றுக்‌ கிழமை முழு ஊரடங்கில்‌ உங்களை மிரட்ட வருகிறாள்‌ “மம்மி சேவ்‌ அனைவரும்‌ கண்டு களியுங்கள்‌. அதற்கான கட்டணம்‌ ரூ.60 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. அனைவரும்‌ ஊரடங்கில்‌ வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன்‌ கண்டு மகிழுங்கள்‌.

இவ்வாறு சதீஷ்குமார்‌ கூறி உள்ளார்.

You'r reading திமிரு நடிகை ஷ்ரயா ரெட்டி படத்தை திடீரென்று ஒடிடியில் நிறுத்திய தயாரிப்பாளர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டது: டிவி தொடருக்கு 2 மாதம் தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்