எஸ்பிபிக்கு முன்னரே தெரிந்த இறுதி முடிவு, வீட்டில் தங்க விடாமல் துரத்திய விதி.. பரபரப்பு தகவல்கள்..

SPB had special intuition about his death

ஞானி, மகான்களுக்கு தனது முடிவு முன்னரே தெரிந்து விடும் என்பார்கள். சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி காந்த் எஸ்பிபி ஒரு மகான் என்றார். தனது முடிவு இந்த மகானுக்கு முன்னரே தெரிந்துவிட்டது போலவே எண்ணத் தோன்றுகிறது. எஸ்பிபி தெய்வபக்தி நிரம்பியவர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர்தான் எஸ்பிபியின் சொந்த ஊர். அங்குள்ள பூர்வீக வீட்டைக் கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தானமாக அளித்தார். அங்குத் தனது தாயார் சகுந்தலாம்மா, தந்தை எஸ்.பி. சம்ப மூர்த்தி ஆகியோருக்கு சிலை வைக்க முடிவு செய்தார். தத்ரூபமாகச் சிலைகள் வடிக்கும் மிகச் சிறந்த சிற்பி ராஜ்குமார். அவரை அழைத்து தனது பெற்றோர் சிலைகள் செய்ய ஆர்டர் கொடுத்தார். அந்த பணிகள் நடந்து வந்தபோது திடீரென்று சிற்பியிடம் தனது சிலையையும் செய்யுமாறு எஸ்பிபி கூறினார்.

பெரும்பாலும் உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதை சென்டி மென்ட்டாக யாரும் விரும்புவதில்லை. அந்த சென்டிமெண்ட் எஸ்பிபிக்கு பிடிபடவில்லை. எதேச்சையாகத் தனது சிலைக்கும் அவர் ஆர்டர் கொடுத்தார் என்றுதான் தெரிகிறது.அப்போதே கொரோனா என்ற எமன் அவரை ஊரைவிட்டுச் செல்ல முடியாமல் சென்னையிலேயே கட்டிப் போட்டது. ஊரடங்கு காரணமாக அவர் சிற்பிக்கு நேரில் சென்று சிலை செய்ய அளவுகள் தர இயலாத நிலையில் அதற்கான புகைப்படங்களைச் சென்னையிலிருந்தே அனுப்பி வைத்தார்.

எஸ்பிபிக்கு சிலை வடிக்கும் பணியைச் சிற்பி தொடங்கிய நிலையில் கொரோனா அரக்கன் எஸ்பிபியை தொற்றியது. டாக்டர்கள் அவரை வீட்டிலிருந்தே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொன்னபோது. இல்லை. இல்லை வீட்டில் இருந்தால் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. மருத்துவமனை வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சிகிச்சை பெறுகிறேன் என்றார். எஸ்பிபி வீடு தெய்வீக சக்தி நிரம்பியது. அங்கிருந்தால் விதியின் வேலை பலிக்காது என்பதாலேயே எஸ்பிபியை வீட்டிலிருந்து விதி விரட்டியது.

மறுநாளே எஸ்பிபி மருத்துவமனைக்குச் சென்றார். ஆரோக்கியத்துடன் வீடியோவில் தோன்றி பேசியவர் தனக்கு லேசான காய்ச்சல் கொரோனா அறிகுறி இருக்கிறது. சிகிச்சை எடுக்க வந்துள்ளேன் யாரும்போன் செய்து என்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று ராங் சென்டிமென்ட்டாக பேசினார். மருத்துவமனையில் சேர்ந்த சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. ஒருபக்கம் எஸ்பிபி உடல்நிலை இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்க ஆந்திராவில் அவரது சிலை வடிப்பு பணிகளும் இறுதிக் கட்ட முடிவுக்கு வர ஆரம்பித்தது. அந்த பணிகள் ஃபினிஷிங் டச் செய்வதற்கு முன்பே எஸ்பிபியின் உயிர் பிரிந்தது.

கொரோனா வடிவில் எஸ்பிபியை வீட்டில் தங்க விடாமல் விதி விரட்டியது, மருத்துவமனையில் துடிப்புடன் சேர்ந்தவர் அசைவற்ற உடல் ஆகும் வரை பல்வேறு வலிகளை எஸ்பிபி அனுபவித்து இறந்தார். அவரது உயிரற்ற உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது மீண்டும் விதி அவரது உடலையும் அந்த வீட்டில் இருக்க விடாமல் போலீஸ் வடிவில் விரட்டியது. இரவோடு இரவாக எஸ்பிபி உடல் பண்ணை வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக அவரது உடல் பெட்டியில் வைத்துக் கூட அடக்கம் செய்யாமல் உடல் மண்ணுக்கு என்பதுபோல் வெற்றுடம்பாக தாமரை பாக்கம் பண்ணை இல்லத்தில் மண்ணில் புதைக்கப்பட்டது.

You'r reading எஸ்பிபிக்கு முன்னரே தெரிந்த இறுதி முடிவு, வீட்டில் தங்க விடாமல் துரத்திய விதி.. பரபரப்பு தகவல்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பூசாரியாக நடித்து பண மோசடியில் ஈடுபட்டவர் தீவிரவாதியா? என்ஐஏ விசாரணை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்