தனுஷ் நடிக்கும் 2ம் பாகம் படம் டிராப்? பிரபல இயக்குனர் என்ன சொல்கிறார்..

Dhnaus Vada chennai 2 Script under process: Vettrimaran

ஆடுகளம் தொடங்கி அசுரன் படம் வரை தனுஷ், வெற்றிமாறன் அணி, வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி இணைந்து அளித்த வட சென்னை படமும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து வடசென்னை 2ம் பாகம் தரவிருப்பதாக கூறப்பட்டது. அதை வெற்றி மாறனும் உறுதி செய்தார். இதற்கிடையில் இந்த கூட்டணி வெவ்வேறு படங்களில் பிரிந்திருக்கிறது. கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இதையடுத்து அட்ரங்கி ரே இந்தி படத்திலும் நடிக்கிறார். மற்றொரு பக்கம் இயக்குனர் வெற்றிமாறன் , சூர்யா நடிக்கும் வாடி வாசல் மற்றும் சூரி நடிக்கும் புதிய படங்களை இயக்க தயாராகி வருகிறார். சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க விருப்பதாக வந்த தகவலுக்கு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
சூர்யா, சூரி நடிக்கும் இரண்டு படங்களை இயக்கும் வெற்றி மாறன் அதில் கவனம் செலுத்துவதால் வடசென்னை 2ம் பாகம் டிராப் செய்யப்பட்டுவிட்டது என்று நெட்டில் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து வெற்றி மாறன் கூறும்போது, வடசென்னை 2ம் பாகம் ஸ்கிரிப்ட் ரெடியாகி வருகிறது என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

You'r reading தனுஷ் நடிக்கும் 2ம் பாகம் படம் டிராப்? பிரபல இயக்குனர் என்ன சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விளையாட்டு துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்