பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகினர் சோகம்..

Popular Director Vijay Reddy Passed away

ஜெகன் மோகினி உள்ளிட்ட பல்வேறு மாயாஜால படங்களை இயக்கியவர் விட்டலாச்சார்யா. இவரது படங்களில் உதவி எடிட்டராக பணியாற்றியவர் விஜய் ரெட்டி. உதவி எடிட்டராக இருந்தாலும் இயக்குனருக்கான ஞானம் பெற்றிருந்தார். 70, 80களில் கன்னடத்தில் நடிகர் ராஜ்குமார் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். அவர் நடித்த ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணா, மயூரா, நா நின்ன மரயலரே. படவர அந்தஹு என அடுத்து ராஜ் குமார் நடித்த படங்களை இயக்கி பிரபலம் ஆனார். இதில் மயூரா படம் ராஜ்குமாரின் நடித்த 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1970 ஸ்ரீநாத் நடித்த ரங்கமஹி ரஹசய்ய என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வெற்றி பெற்றது. அவருக்கு இயக்குனருக்கான இடத்தை பிடிக்க உதவியது. கன்னடத்தில் பல்வேறு நடிகர்கள் நடித்த சுமார் 50 படங்களை விஜய் ரெட்டி இயக்கினார். மேலும் தமிழ். தெலுங்கு. மலையாள மொழிகளில் படம் இயக்கி இருக்கிறார்.
1996ம் ஆண்டு விஷ்ணுவர்தன் நடித்த கர்நாடகா சுபுத்ரா படத்தை இயக்கினர். ராஜ்குமாரின் கனவு படமாகத் திகழ்ந்த பக்த அம்பரீஷா என்ற படத்தை இயக்கவும் முடிவு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது.

டைரக்டர் விஜய் ரெட்டி வயது முதிர்வு காரணமாகப் படங்கள் இயக்குவதிலிருந்து விலகி சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
கன்னட திரையுலகினர் இயக்குனர் விஜய் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் பல திரையுலக கலைஞர்கள் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் போன்ற முக்கிய பிரபலங்கள் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தது ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

You'r reading பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகினர் சோகம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரசு பணிகளில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு 32 ஆக உயர்வு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்