தீபாவளிக்கு நயன்தாரா படம் ரிலீஸ், திடீர் அறிவிப்பு..!

Nayanthara Mookkuthi Amman Dewali Release on OTT

தீபாவளி நெருங்கி விட்டது. ஆனால் கொரோனா விலகாமல் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. சினிமா தியேட்டர்களை திறக்கலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நடந்துக் கொண்டே இருக்கிறது.சினிமா தியேட்டர்களை திறக்கவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதித்து நடத்தவும் ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தாலும் தமிழ் நாட்டில் மட்டும் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி தராமலிருக்கிறது.

இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன் முதல்வரை அவரது இல்லத்தில் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தியேட்டர்களை திறக்க அனுமதி கோரினார். அதுகுறித்து டாக்டர்களிடம் ஆலோசித்து விட்டு 28ம் தேதி சொல்வதாக முதல்வர் கூறினார்.

தியேட்டரில் தீபாவளிக்குப் படங்கள் வருகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒடிடியில் தீபாவளிக்கு நயன்தாரா படம் வெளியாவது உறுதி ஆகி இருக்கிறது.டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் தீபாவளி தினத்தில் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கி உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என இன்று அறிவிக்கப்பட்டதுடன் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதுபற்றி ஆர் ஜே பாலாஜி கூறும்போது.கடந்த 15 வருடமாக பக்தி படமே வரவில்லை. ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா நடித்ததற்குப் பிறகு பக்தி படம் வரவில்லை எனவே தான் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் இயக்கினேன்.

இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இயக்கவும் எண்ணி உள்ளேன் என்றார்.அதேபோல் டிஸ்னி பிஸஸ் ஹாட் ஸ்டாரில் சத்யராஜ், சீதா நடிப்பில் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட், வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் லைவ் டெலிகாஸ்ட், ஜெய், வாணி போஜன் நடிக்கும் ட்ரிப்பிள்ஸ், தமன்னா நடிக்கும் நவம்பர் ஸ்டோரிஸ் ஆகிய சீரிஸ்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதற்கான அறிமுக நிகழ்ச்சி டிஜிட்டல் தளத்தில் இன்று நடந்தது. இதில் கலைஞர்கள் பங்கேற்றனர்.

You'r reading தீபாவளிக்கு நயன்தாரா படம் ரிலீஸ், திடீர் அறிவிப்பு..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல சின்னத்திரை நடிகைக்கு கூடிய விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்