நண்பருக்கு கொரோனா பரவியதற்கு பேனர் வைத்த அஜீத் ரசிகர்கள்.. லைக் பேட்ட விஜய் ரசிகர்கள்..

கொரோனா தொற்று என்றவுடன் அருகில் இருப்பவர் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நண்பனுக்கு கொரோனா வந்ததாக அஜீத் ரசிகர்கள் பேனர் வைத்து விழா எடுத்து கொண்டாடினார்கள். அந்த ருசிகரம் பற்றிய விவரம்:அஜித் ரசிகர்கள் கொரோனாவை கருப்பொருளாக வைத்து ராமநாதபுர மாவட்டத்தில் நண்பர் கல்யாணத்துக்கு வாழ்த்து பேனர் அச்சடித்து மண்டபம் அருகே வைத்திருந்தனர்.

இதில் விசேஷம் என்னவென்றால் மணமகன், மணமகள் என்பதற்குப் பதிலாக தொற்றானவர், தொற்று கொண்டவர் எனவும் திருமண தினத்தை தொற்று உறுதி செய்த நாள், கல்யாணம் நடைபெறும் மண்டபத்தை தொற்று பரவிய இடம் எனவும் நகைச் சுவையாகக் குறித்துள்ளனர்.நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவியுடன் என்று வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

நண்பர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்பாக கோவிட், பாசிடிவ், முகக்கவசம், சானிடைசர், விலகி இரு, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல், விழித்திரு, சுடுநீர் என்று கொரோனா தடுப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். அச்சிடப்பட்டுள்ளது.அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மோதிக்கொள்வதுண்டு, பல சமயம் தியேட்டரில் இருதரப்புக்கும் கைகலப்பும் நடக்கும். சமூக வலைத்தளத்தில் நடக்கும் மோதலுக்கு முடிவே கிடை யாது. இவர்களின் இந்த மோதல் கடந்த 8 மாதமாக முடங்கி இருக்கிறது அதற்குக் காரணமும் கொரோனா தான். கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடியிருப்பதால் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் திரைக்கு வராமலிருக்கிறது.

அஜீத் நடிக்கும் வலிமை படம் ஷூட்டிங் தடைப்பட்டு அதுவும் ரிலீஸ் பக்கம் வரவில்லை. இதனால் இரு தரப்பும் சைலன்ட்டாக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். அதே சமயம் நண்பனுக்காக அஜீத் ரசிகர்கள் வைத்த கொரோனா பேனர், விஜய் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. விஜய் ரசிகர்களும் இதற்கு லைக் போட்டு வருகின்றனர்.

You'r reading நண்பருக்கு கொரோனா பரவியதற்கு பேனர் வைத்த அஜீத் ரசிகர்கள்.. லைக் பேட்ட விஜய் ரசிகர்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எல்.ஆர். ஈஸ்வரியுடன் அருள் வந்து ஆட்டம்போட்ட நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்