தீபாவளிக்கு விஜய்யின் மாஸ்டர் வருவதில் புதிய சிக்கல்.. பட்டாசு வெடிக்க தயாராகும் புதுப்படங்கள்..

கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார்.கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதல் படி 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே படம் பார்க்க தியேட்டரில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார்.

இதனால் பல படங்கள் தீபாவளி ரேஸில் பங்கேற்க தயாராகி வருகின்றன. தீபாவளி கொண்டாட ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். தீபாவளி தினமான நவம்பர் 14ம் தேதி தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும் என்று தெரிகிறது. ஜீவா அருள் நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம், சத்யராஜ் சசிகுமார் இணைந்துள்ள எம்ஜிஆர் மகன் படம், புதுமுகங்கள், சீனியர் நடிகர்கள் நடித்துள்ள பன்றிக்கு நன்றி சொல்லி படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து படத்தை தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளார். இது தவிர மேலும் சில படங்கள் தீபாவளிக்குத் தயாராகி வருகிறது.தீபாவளி போட்டியில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் பங்கேற்பது பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதமே மாஸ்டர் படத்தை வெளியிடப் படக் குழு திட்டமிடப்பட்டது ஆனால் கொரோனா ஊரடங்கால் தொடர்ச்சியாகக் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு வந்தன.தியேட்டர் திறந்தால் மாஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தியேட்டரில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என்பதால் எதிர்பார்க்கும் வசூல் வருமா என்பது தெரியவில்லை.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தியேட்டர்கள் திறப்பதால் தைரியமாகப் பெண்கள். குடும்பத்தினர் வருவார்களா என்பதும் சந்தேகமாக உள்ளது. மேலும் தியேட்டர் அதிபர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.தியேட்டரில் படங்கள் ரிலீஸ் செய்யும்போது அதற்குத் தயாரிப்பாளர்கள் வி பி எப் கட்டணம் கட்டி வந்தனர். தற்போது அந்த கட்டணத்தைக் கட்ட முடியாது என்று அறிவித்துள்ளனர். இதனால் படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஏற்கனவே டைரக்டரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் வேட்பாளருமான டி. ராஜேந்தர் கூறிய போது. உலகம் முழுக்க தியேட்டர்களுக்கு வி பி எப் கட்டணம் கட்டுவதைத் தயாரிப்பாளர்கள் நிறுத்தி விட்டார்கள் அதற்காகக் கட்ட வேண்டிய காலத்தில் கோடிகளில் கட்டி முடிக்கப்பட்டது ஆனால் இங்கு மட்டும்தான் இன்னும் விபி எப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அந்த கட்டணத்தைக் கட்ட முடியாது என்று அறிவித்தார்.

அதேபோல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளியும், இனி தயாரிப்பாளர்கள் வி பி எப் கட்டணதை தியேட்டர் களுக்கு கட்ட வேண்டாம் என்று அரித்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே இந்த கோரிக்கையை தியேட்டர் அதிபர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
புதிய படங்களைத் திரையிடத் தராவிட்டால் தியேட்டர்களை கல்யாண மண்டபம் ஆக்குவோம். ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்புவோம் என்று பதிலடி தந்தனர். இந்த பிரச்சனையால் படங்கள் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

You'r reading தீபாவளிக்கு விஜய்யின் மாஸ்டர் வருவதில் புதிய சிக்கல்.. பட்டாசு வெடிக்க தயாராகும் புதுப்படங்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யோகிபாபுவுக்கு அடித்த இரண்டாவது ஜாக்பாட்.. இவருடன் ஹீரோயினாக ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்