பாம்பு பிடித்த நடிகர் மீதான புகார்.. வன அதிகாரியிடம் இயக்குனர் விளக்கம்..

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'ஈஸ்வரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப் படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கணினி கிராபிக்ஸ் செய்யும்போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின்றோம்.இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார், நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம். படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டி தலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு சுசீந்திரன் கூறினார்.

ஒன்றரை வருடமாகப் படங்களில் நடிக்காமல் விலகி இருந்த சிம்பு கடந்த ஆண்டு தான் மாநாடு படத்தில் நடித்தார். அப்படம் கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டது. இந்நிலையில் தான் ஊரடங்கு காலத்தில் சில இயக்குநர்களிடம் சிம்பு கதை கேட்டார். அதில் சுசீந்திரன் கதை பிடித்திருந்தது குடும்ப பாசம், கிராமத்துப் பின்னணி என எல்லா அம்சமும் கலந்த கதையாக இருந்ததையடுத்து உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்.ஈஸ்வரன் என்ற டைட்டிலுடன் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் சிம்பு நாகப் பாம்பு வைத்திருப்பது போல் போஸ் இடம் பெற்றிருந்தது. அடுத்த சில நாட்களில் அவர் இரண்டு பேர்களுடன் வனப்பகுதிக்குச் சென்று பாம்பு பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. அது சர்ச்சையானது.

You'r reading பாம்பு பிடித்த நடிகர் மீதான புகார்.. வன அதிகாரியிடம் இயக்குனர் விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இப்படியும் ஒரு வாக்குச்சாவடி.. பீகார் தேர்தலில் பிரமிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்