சூரரைப் போற்று நிஜ ஹீரோ என்ன சொல்கிறார்?

ஏர் டெக்கான். இந்த விமான நிறுவனத்தை நினைவிருக்கிறதா? ஒரு ரூபாய்க்கு விமான டிக்கட் என்கிற என்ற அதிரடி அறிவிப்புடன் துவங்கப்பட்டது இந்த நிறுவனம். இதன் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுய சரிதையான சிம்ப்ளி ஃப்ளையை அடிப்படையாக கொண்டுதான் சூரரைப்போற்று படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கேப்டன் கோபிநாத் இந்த படத்தைப் நேற்று முன்தினம் பார்த்திருக்கிறார்.

படத்தைப் பற்றி அவர் கூறுகையில், இந்தப்படத்தின் பல காட்சிகள் சிரிக்கவும் குடும்பக் காட்சிகள் அழவும் வைத்தன. இந்தக் காட்சிகள் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. என் மனைவி பார்கவி கதாபாத்திரம் அழகாக இருந்தது.

அதிக கற்பனைகள் கலந்திருந்தாலும் என்னுடைய சுயசரிதையின் நோக்கத்தைப் படம் சரியாகப் பிரதிபலித்திருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கராவுக்குப் பெரிய சல்யூட்

முன்னேறத் துடிக்கும் ஒரு தொழில் முனைவோரின் கதாபாத்திரத்தை சரியாகவும் வலுவாகவும் செய்திருக்கிறார் சூர்யா. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்தப் படம் பலருக்கும் உத்வேகமாக அமையும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்..

You'r reading சூரரைப் போற்று நிஜ ஹீரோ என்ன சொல்கிறார்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காதலனுக்காக காத்திருக்கும் பிரபல நடிகை.. டேட்டிங்கிற்கும் ரெடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்